Event

ஜயந்தி குரு- உதும்பலா

மார்ச் 12, 2020
- nodelete

இணை – உருவாக்குநர் மற்றும் ஆலோசகர் ,  Delete பண்ண வேண்டாம்

ஜெயந்தி குரு-உதும்பலா ஒரு பெண்ணியவாதி மற்றும் இரண்டு தசாப்தங்களுக்கும் மேலான அனுபவமுள்ள பெண் உரிமை ஆர்வலர், மேலும் நீண்ட காலமாக மலையேறுபவர் ஆவார். பாலினம், பாலின அடிப்படையிலான வன்முறை, பாலியல், ஆண்மை, பெண்களின் மனித உரிமைகள் மற்றும் மிக சமீபத்தில் விளையாட்டுத் துறையிலுள்ள பெண்கள் தொடர்பான பிரச்சினைகளில் தொழில்நுட்ப ஆலோசகராக, பயிற்சியாளராக, ஆராய்ச்சியாளராக மற்றும் திட்ட முகாமையாளராக தேசிய, பிராந்திய மற்றும் உலக அளவில் பணியாற்றியுள்ளார். 2016 ஆம் ஆண்டில், எவரெஸ்ட் சிகரத்தை ஏறிய முதல் இலங்கையர் என்ற பெருமையை ஜெயந்தி பெற்றதுடன் இந்த சாதனையை அங்கீகரிக்கும் வகையில், 2016-2019 வரையிலான பெண்கள் உரிமைகளுக்கான நல்லெண்ண தூதுவராக இலங்கையின் மகளிர் விவகார அமைச்சினால் நியமிக்கப்பட்டார். 2016 ஆம் ஆண்டு முதல், வன்முறை மோதலைக் குறைப்பதற்கான அரசியல் உரையாடலை எளிதாக்கும் ஆம்ஸ்டர்டாம் அடிப்படையிலான அறக்கட்டளையான டயலொக் எட்வைஸரி குரூப்பின் (Dialogue Advisory Group) ஆலோசகராக இருந்து வருகிறார். அவர் தற்போது இலங்கை தேசிய ஒலிம்பிக் குழுவின் பாலியல் துன்புறுத்தல் முறைப்பாட்டுக்  குழுவின் தலைவராகவும், இலங்கையில் உள்ள பெண்கள் மற்றும் ஊடகக் கூட்டமைப்பின் (Women and Media Collective) தலைவியாகவும், இலங்கையில் உள்ள பெண்கள் வள மையத்தின் குழு உறுப்பினராகவும், ஐக்கிய இராச்சியத்தை அடிப்படையாகக் கொண்ட  தொண்டு நிறுவனமாகிய விமென்  ஒஃப் த வேர்ல்ட் பவுன்டேஷனின் (Women of the World Foundation) அறங்காவலராகவும் உள்ளார். ஜெயந்தி, ஐக்கிய இராச்சியத்தின் சசெக்ஸ் பல்கலைக்கழகத்தில் பாலினக் கற்கைநெறியில் முதுகலை மாணிப் (MA) பட்டதாரியாகவும், இலங்கை கொழும்பு பல்கலைக்கழகத்தில் பெண்கள் தொடர்பான கற்கையில் பட்டப்பின் டிப்ளோமாவையும் பெற்றுள்ளார்.

You may also like