உங்களது உரிமைகள்

இணையத் தொடர்பில் இல்லாத போது உங்களது உரிமைகள் எவையோ இணையத்தில் இருக்கும்போதும் உங்களது உரிமைகள் அவையே.

உங்களது பால்நிலை அல்லது பாலியல் நாட்டத்தின் அடிப்படையில் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்படாமல் இணையத்தில் உங்களை வெளிப்படுத்த உங்களுக்கு உரிமை உண்டு.

தணிக்கை, இழிவூக்குள்ளாக்கல், அல்லது நன்நடத்தைக்கான கண்காணிப்புக்கு உள்ளாக்கப்படாமல் இணையத்தில் உங்களது பாலியல் வெளிப்பாடுகளுக்கான உரிமை உங்களுக்கு உண்டு.

இணையத்தில் நீங்கள் உங்களை எவ்வாறு வெளிப்படுத்துகிறீர்கள் என்பதன் முழுக்கட்டுப்பாட்டுக்கும், அந்தரங்கத்துக்குமான உரிமை உங்களுக்கு உண்டு.

உங்களை வெளிப்படுத்த இணையத்தில் நீங்கள் உருவாக்கிய அல்லது பகிர்ந்து கொண்ட நெருக்கமான படங்கள் உட்பட எந்தவொரு ஆக்கத்திற்குமான முழுக் கட்டுப்பாட்டுக்கும், அந்தரங்கத்துக்குமான உரிமை உங்களுக்கு உண்டு.

உங்களது வாழ்வின் எப்பகுதியை நீங்கள் பிறருடன் பகிர்ந்து கொள்ளப் போகிறீர்கள் என்பதன் முழுக் கட்டுப்பாட்டுக்கும், தீர்மானத்துக்குமான உரிமை உங்களுக்கு உண்டு.

உங்களது பால்நிலை, பாலியல் நாட்டம், வயது, கல்வி, இனம், மதம், சமூக வர்க்கம், போன்றவை எதுவாகவிருப்பினும், அனைத்து வகையான வன்முறையிலிருந்தும் விடுபட்டுப் பாதுகாப்பாக இணையத்தில் இருக்க உங்களுக்கு உரிமை உண்டு.

நீங்கள் மேலதிகமாக அறிந்து கொள்ள விரும்பினால் இணையம் தொடர்பான பெண்ணிலைவாதக் ¬கொள்கைகளைப் பார்வையிடுக.
https://feministinternet.org/