எங்களை பற்றி

About
எங்களை பற்றி

Delete பண்ண வேண்டாம் என்பது இலங்கையில் சிறுமிகள், பெண்கள் மற்றும் திருநர்களுக்கெதிரான தொழிநுட்பம் சார் வன்முறை தொடர்பான சம்பவங்களை ஆவணப்படுத்தும் நோக்கில் மும்மொழியிலமைந்த ஒரு வலைய அடிப்படையிலான கணக்கெடுப்புக் கருவியாகும். இக்கருவியானது, தொழிநுட்பஞ்சார் வன்முறை என்பது எவ்வாறமையக் கூடும், அத்தகைய வன்முறைகளைக் கையாளும் முறைகள் மற்றும் உறுதுணையளிக்கும் வெளிகள் பற்றிய இணையத் தொடர்புகள் ஆகிய வளங்களோடு ஒரு இணையத் தளத்தில் வைக்கப்படும். Delete பண்ண வேண்டாம் என்பது, எதிர்கால நடவடிக்கைகளுக்காக வன்முறையின் பதிவுகளைப் பராமரிப்பதன் அவசியத்தைச் சுட்டி நிற்கின்றது. இந்த திட்டம் ஜயந்தி குரு உதும்பால, ஸெய்னப் இப்றாஹிம் மற்றும் சச்சினி பெரேரா ஆகியோரினால் CREA வின் ஆதரவுடன் உருவாக்கப்பட்டது.

Team

ஜயந்தி

பெண்கள் உரிமைகளுக்கான செயற்பாட்டாளர்

ஜயந்தி குரு உதும்பால, 15 வருடங்களுக்கும் அதிகமான அனுபவத்தைக் கொண்ட பெண்கள் உரிமைகளுக்கான செயற்பாட்டாளராவார். இவர் 2016, மே மாதம், எவரெஸ்ட் சிகரத்தினைத் தொட்ட முதலாவது இலங்கையராக தன்னை பதிவு செய்தார். இந்த அடைவிற்கான அங்கீகாரமாக 2016-2019 வரை, பெண்கள் விவகார அமைச்சினால் பெண்கள் உரிமைகளுக்கான நல்லெண்ணத் தூதுவராக நியமிக்கப்பட்டார். கிறிஸலிஸில் அவரது வேலையின் ஊடாக, கெயார் இன்டர்நெஷனலில் சார்பாக பால்நிலை அடிப்படையிலான வன்முறையினைத் தடுப்பதற்கான சர்வதேச குழுவொன்றினை இணைத் தலைமையேற்று வழிநடத்துகிறார். ஜயந்தி, பாலியல் துன்புறுத்தலுக்கு எதிரான முறைப்பாடுகளுக்கான தேசிய ஒலிம்பிக் குழுவினது தலைவராகவும் உள்ளார். இவர் ஐக்கிய இராச்சியத்தின் சசெக்ஸ் பல்கலைக் கழகத்தின் முதுகலைப் பட்டத்தினையும் கொண்டுள்ளார்.

Team

ஸெய்னப்

பெண்ணிலைவாத செயற்பாட்டாளர்

ஸெய்னப் இப்றாஹிம் இலங்கையை தளமாகக் கொண்ட ஒரு பெண்ணிலைவாத செயற்பாட்டாளர் மற்றும் ஆய்வாளராவார். இவரது அதிகமான பணிகள் பால்நிலை சமத்துவம் மற்றும் பெண்கள் உரிமைகள் பற்றியன என்பதுடன் அவை சார்ந்து பரப்புரையினையும் உள்ளடக்குவன. கிறிஸலிஸில் அவரது வேலையின் ஊடாக கெயார் இன்டர்நெஷனல் சார்பாக பால்நிலை அடிப்படையிலான வன்முறையினைத் தடுப்பதற்கான சர்வதேச குழுவொன்றினை இணைத் தலைமையேற்று வழிநடத்துகிறார். அவரது முன்னைய வேலை இலங்கையில் மதம்சார் வன்முறை மற்றும் அதனுடன் இணைந்த முரண்பாடுகள் பற்றிய ஆய்வையும், ஆவணப்படுத்தலையும் உள்ளடக்கியிருந்தது. ஸெய்னப், இந்தியாவின் சமூக விஞ்ஞானங்களுக்கான டாடா நிறுவகத்தில் அபிவிருத்திக்கான கற்கைகளில் முதுகலைப் பட்டத்தினைக் கொண்டிருக்கிறார்.

Team

சசினி

குயர் பெண்ணிலைவாத செயற்பாட்டாளர்

சச்சினிஇலங்கையைச் சேர்ந்த ஒரு குயர் பெண்ணிலைவாத செயற்பாட்டாளராவார். அவரது வேலை இணையம், சனரஞ்சக கலாசாரம், பாலியல்பு மற்றும் பால்நிலை, கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம் மற்றும் கொள்கையாக்கம் ஆகியவற்றின் குறுக்குவெட்டுத் தன்மையுடையதாக இருக்கின்றது. கடந்த தசாப்தமாக அவர் பெண்ணிலைவாத மற்றும் பெண்கள் உரிமைகளுக்கான நிறுவனங்களுக்காக மூலோபாய தொடர்பாடல்கள் மற்றும் பரிந்துரைகளைச் செய்து வருகிறார். 2017இல் பெண்ணிலைவாத முன்னெடுப்பான கோஷ (பெரும் சத்தம், ஒலியெழுப்பல், வெளிப்படையாக பேசல் என அர்த்தம்) என்பதனை இலங்கையில் உருவாக்கினார். இது இலங்கையிலுள்ள பெண்களுக்கும், குயர் நபர்களுக்கும் இணையத்தை சுதந்திரமாக, உரிமை அடிப்படையில், பயன்தரு வகையில், சந்தோசமாகப் பயன்படுத்துவதனை நோக்காகக் கொண்டது.