Event

பிரிஸ்கிலா அருள்பிரகாசம்

பிப்ரவரி 12, 2024
- Mishaari Weerabangsa

சக தலைவர், செயற்பாடுகள், Delete பண்ண வேண்டாம்

பிரிஸ்கிலா அருள்பிரகாசம் சமூகப்பணி இளமானி பட்டத்தை தேசிய சமூக அபிவிருத்தி நிறுவனத்தில் பெற்றுக்கொண்டதுடன், ஐஸ்லாந்து பல்கலைக்கழகத்தின் சர்வதேச பாலினக் கல்வியில் முதுகலை டிப்ளோமா பட்டத்தையும் பெற்றுள்ளார். இவர் பாலியல் மற்றும் இனப்பெருக்க சுகாதாரம் மற்றும் உரிமைகள், பாலினம் மற்றும் பாதுகாப்பான கருக்கலைப்பு தொடர்பில் பணியாற்றுமொரு பெண்ணிய செயற்பாட்டாளராவார். அவர் பெண்கள், சிறுமிகள், இளைஞர்கள் தம் உடல் குறித்த தெரிந்த தீர்மானங்களை மேற்கொள்வதில் எதிர்நோக்கும் சவால்கள் தொடர்பான பிரச்சனைகள் தொடர்பாக துணைவலுசேர்த்தல் நடவடிக்கைகளை கடந்த 9 வருடங்களாக மேற்கொண்டு வருகிறார். அவர் உடல் தொடர்பான சுய அதிகாரம், விசேட தேவையுடையோரின் உரிமைகள் மற்றும் நபர்கள் தமது வெவ்வேறு அடையாளங்கள் காரணமாக எதிர்கொள்ளும் குறுக்குவெட்டு பிரச்சனைகள் தொடர்பில் அதிக ஆர்வம் கொண்டுள்ளார். இவர் 2016/2018யில் இலங்கை குடும்பத்திட்டமிடல் சங்கத்தின் இளைஞர் ஆலோசனை குழுவின் தலைவராக பணியாற்றியுள்ளதுடன், 2019ம் ஆண்டில் ஐக்கிய நாடுகளின் சனத்தொகை நிதியத்தின் பாலியல் மற்றும் இனப்பெருக்க சுகாதாரத்துக்கான புத்தாக்க பெலோஷிப்பை பெற்றுக்கொண்டார். தற்போது இவர் Delete பண்ண வேண்டாம் நிறுவனத்தின் செயற்பாடுகளுக்கான சக தலைவராகவும், யூத் அட்வொகசி நெட்வோர்க் இலங்கையின் நிறுவன அபிவிருத்தி மற்றும் நிர்வாகத்திற்கான பணிப்பாளராகவும் பணியாற்றுகிறார்.

You may also like