தனியுரிமைக் கொள்கை

இணையத்தளம்

தொடர்புப் படிவங்கள்

எங்கள் தளத்தில் நீங்கள் கருத்து தெரிவித்தால், நீங்கள் விரும்பினால் உங்கள் பெயர், மின்னஞ்சல் முகவரி மற்றும் இணையத்தளத்தை குக்கீகளில் சேமிக்கலாம். இவை உங்கள் வசதிக்காக உள்ளவையாகும், நீங்கள் மற்றொரு கருத்தை இடும்போது உங்கள் விவரங்களை மீண்டும் நிரப்ப வேண்டியதில்லை. இந்த குக்கீகள் ஒரு வருடம் நீடிக்கும்.

பிற இணையத்தளங்களிலிருந்து உட்பொதிக்கப்பட்ட உள்ளடக்கம்

இந்தத் தளத்தில் உள்ள கட்டுரைகளில் உட்பொதிக்கப்பட்ட உள்ளடக்கம் இருக்கலாம் (உ.ம் காணொளிகள், படங்கள், கட்டுரைகள் போன்றவை). மற்ற இணையத்தளங்களில் உள்ள உட்பொதிக்கப்பட்ட உள்ளடக்கம், பார்வையாளர் மற்ற இணையத்தளத்தைப் பார்வையிட்டதைப் போலவே செயல்படுகிறது.

நீங்கள் கணக்கு வைத்திருந்தால் மற்றும் அந்த இணையத்தளத்தில் உள்நுழைந்திருந்தால் இந்த இணையத்தளங்கள் உட்பொதிக்கப்பட்ட உள்ளடக்கத்துடன் உங்கள் தொடர்புகளைக் கண்காணிப்பது உட்பட உங்களைப் பற்றிய தரவைச் சேகரிக்கலாம், குக்கீகளைப் பயன்படுத்தலாம், மேலதிக மூன்றாம் தரப்பு கண்காணிப்பை உட்பொதிக்கலாம் மற்றும் உட்பொதிக்கப்பட்ட உள்ளடக்கத்துடனான உங்கள் தொடர்புகளைக் கண்காணிக்கலாம்..

உங்கள் தரவு மீது உங்களுக்கு என்ன உரிமைகள் உள்ளன?

இந்தத் தளத்தில் உங்களிடம் கணக்கு இருந்தால் அல்லது கருத்துரைகள் இருந்தால், நீங்கள் எங்களுக்கு வழங்கிய தரவு உட்பட, உங்களைப் பற்றி நாங்கள் வைத்திருக்கும் தனிப்பட்ட தரவின் ஏற்றப்பட்ட கோப்பைப் பெற நீங்கள் கோரலாம். உங்களைப் பற்றி நாங்கள் வைத்திருக்கும் தனிப்பட்ட தரவை அழிக்குமாறும் நீங்கள் கோரலாம். நிர்வாக, சட்ட அல்லது பாதுகாப்பு நோக்கங்களுக்காக நாங்கள் வைத்திருக்க வேண்டிய எந்தத் தரவும் இதில் உள்ளக்கப்படவில்லை.

கணக்கெடுப்பு

உங்கள் தகவல் எங்கே போகும்?

இந்த கணக்கெடுப்பு அநாமதேயமானது. நீங்கள் விரும்பினால், கணக்கெடுப்பின் முடிவில் ஸ்கிரீன் ஷொட்கள் அல்லது பிற துணைத் தகவலைப் பதிவேற்றலாம். நீங்கள் கணக்கெடுப்பை முடிக்க இது அவசியமில்லை, ஆனால் நீங்கள் அவ்வாறு செய்தால், உங்களை அல்லது வேறு யாரையாவது அடையாளம் காணும் எந்தத் தகவலும் வெட்டப்பட்டதா, இருட்டடிக்கப்பட்டதா அல்லது அகற்றப்பட்டதா என்பதை உறுதிப்படுத்தவும். இதற்கு உங்களுக்கு உதவி தேவைப்பட்டால், எங்களை அல்லது உங்களை ஆதரிக்கும் நிறுவனத்தை அணுகவும்.

சேகரிக்கப்பட்ட தரவு பாதுகாப்பான தரவுத்தளத்தில் சேமிக்கப்படும் மற்றும் ஸ்கிரீன்ஷொட்கள் 12 மாதங்களுக்கு மட்டுமே சேமிக்கப்படும். மேற்கண்ட நோக்கங்களுக்காக, சமூக அறிவியல் ஆராய்ச்சியாளரால், Delete பண்ண வேண்டாம் (Delete Nothing) குழு மூலம் இந்தத் தகவல் பகுப்பாய்வு செய்யப்படும். கருத்துக்கணிப்பின் முடிவில் நீங்கள் எங்களுடன் பகிர்ந்து கொண்ட தகவலின் நகலையும் பதிவிறக்கம் செய்யலாம், நீங்கள் நடவடிக்கை எடுக்க விரும்பினால் அதைப் பயன்படுத்தலாம்.

பொறுப்பான தரவுக் கொள்கை

த என்ஜின் ரூம் (The Engine Room) இன் டெட்நெவ் (“DatNav) இனால் வழங்கப்பட்ட வழிகாட்டல்கள்: “மனித உரிமைகள் ஆராய்ச்சிக்கான டிஜிட்டல் தரவை எவ்வாறு வழிநடத்துவது” (The Engine Room’s “DatNav: How to navigate digital data for human rights research) தரவு சேகரிப்பு, பகுப்பாய்வு மற்றும் வெளியிடுதல் ஆகியவை பொறுப்பான மற்றும் நெறிமுறையான முறையில் செய்யப்படுவதை உறுதி செய்வதற்காகப் பயன்படுத்தப்படுகின்றன.