உங்கள் கதையைப் பகிரவும்

இந்த ஆய்வுக் கணக்கெடுப்பு பற்றி

Delete பண்ண வேண்டாம் என்றால் என்ன ?

Delete பண்ண வேண்டாம் என்பது மும்மொழியிலான இணையத்தளத்தினை அடிப்படையாக கொண்ட ஒரு கணக்கெடுப்புக் கருவியாகும். இலங்கையில் இடம்பெறும் தொழில்நுட்பம் தொடர்பான வன்முறை நிகழ்வுகளை ஆவணப்படுத்துவதை இது நோக்கமாக கொண்டுள்ளது. தொழில்நுட்பம் தொடர்பான வன்முறை எப்படி இருக்கும், இதுபோன்ற வன்முறைகளைக் கையாள்வதற்கான வழிகள் மற்றும் அதற்கான ஆதரவு சேவைகளுக்கான இணைப்புகள் ஆகியவற்றை நாங்கள் வழங்குகிறோம். எதையும் அழிப்பதில்லையானது அடுத்த கட்ட நடவடிக்கைகளுக்காக வன்முறை சம்பவங்களின் பதிவுகளை பராமரிப்பதன் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது.

Delete பண்ண வேண்டாம்எதனை அடைய எதிர்பார்க்கின்றது?

இந்த கணக்கெடுப்பின் மூலம், அரசாங்கத்திடமிருந்தும் சமூக ஊடக தளங்களிலிருந்தும் வலுவான சமூக மற்றும் சட்டரீதியான பதில்களைக் கோருவதற்கான ஆதாரங்களை சேகரிப்பது எமது நோக்கம். உங்கள் கதைகள்
மூலம் தொழில்நுட்பம் தொடர்பான வன்முறைகளின் போக்குகள் மற்றும் அதன் வடிவங்களை அடையாளம் கண்டு ஆவணப்படுத்த விழைகிறோம். இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு / வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டு தொடர்ந்து வாழ்ந்துவருவோருக்கும் நீதி கிடைக்கப்பெற உதவலாம் என்பதோடு குற்றவாளிகளை பதில் கூற வைக்கலாம் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்.

உங்கள் தகவல்கள் எங்கே செல்லும்?

இந்த ஆய்வானது விபரங்கள் வெளியே வழங்கப்படாத அனாமதேய ஒன்றாகும். சேகரிக்கப்பட்ட தரவு பாதுகாப்பான தரவுத்தளத்தில் சேமிக்கப்படும் மற்றும் திரைப்பிரதிகள் (ஸ்கிரீன் ஷாட்கள்) 12 மாத காலத்திற்கு மட்டுமே சேமிக்கப்படும். மேற்கூறிய நோக்கங்களுக்காக, எதையும் அழிப்பதில்லை குழுவானது ஒரு சமூகவியல் ஆராய்ச்சியாளரோடு சேர்ந்து தகவல் பகுப்பாய்வினை மேட்கொள்ளும். கணக்கெடுப்பின் முடிவில் நீங்கள் எங்களுடன் பகிர்ந்து கொண்ட தகவலின் பிரதியினை பதிவிறக்கமும் செய்து கொள்ளலாம். அத்தோடு வன்முறைக்கு எதிராக நீங்கள் நடவடிக்கை எடுக்க விரும்பினால் இதனைப் பயன்படுத்தலாம். உங்கள் தகவலை நாங்கள் இனி பயன்படுத்துவதை விரும்பவில்லை என்று நீங்கள் பின்னர் முடிவு செய்தால், தயவுசெய்து உங்கள் குறிப்பு எண்ணுடன் எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள், நாங்கள் அதை எங்கள் தரவுத்தளத்திலிருந்து அகற்றுவோம்.

பொறுப்பான தரவுக் கொள்கை

தரவின் சேகரிப்பு, பகுப்பாய்வு மற்றும் வெளியீடு ஆகியவை பொறுப்பான மற்றும் நெறிமுறை சார்ந்து செய்யப்படுவதை உறுதி செய்வதற்காக இன்ஜின் அறையினால் “DatNav: How to navigate digital data for human rights research” வழங்கிய வழிகாட்டுதல்கள் பயன்படுத்தப்படுகின்றன.

உங்களால் இந்த கருத்துக்கணிப்பை நிகழ்நிலையில் பூர்த்தி செய்யமுடியாவிட்டால், கருத்துக்கணிப்பின் வேர்ட் (word) ஆவணத்தைப் பதிவிறக்கம் செய்து, உங்கள் பதில்களை deletenothingcontact@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம். Delete பண்ண வேண்டாம் குழுவால் நீங்கள் அடையாளம் காணப்படாமல் இருக்க விரும்பினால், அநாமதேய மின்னஞ்சலைப் பயன்படுத்தலாம்.

நான் இந்த கணக்கெடுப்பை …………………. சார்பாக நிரப்புகிறேன்

மேலே குறிப்பிட்டுள்ள நோக்கங்கள் மற்றும் ஏனைய மேற்கூறியவற்றைப் படித்து புரிந்து கொண்டேன் என்பதையும், இந்த கணக்கெடுப்பில் நான் வழங்கும் தகவல்களைப் பயன்படுத்த ஒப்புதல் அளிக்கிறேன் என்பதையும் இதன்மூலம் சான்றளிக்கிறேன்.

எதையும் அழிப்பதில்லையைத் தொடர்புகொள்வதன் மூலம், இந்த கணக்கெடுப்பின் போது அல்லது அதற்குப் பிறகு எந்த நேரத்திலும் எனது சம்மதத்தை திரும்பப் பெற முடியும் என்பதையும் நான் புரிந்துகொள்கிறேன்.