Event

Delete பண்ண வேண்டாம் இல் தலைமை மாற்றம் தொடர்பான அறிவிப்பு

ஜூலை 12, 2023
- Mishaari Weerabangsa

அன்பிற்குரிய நண்பர்களே மற்றும் Delete பண்ண வேண்டாம் ஆதரவாளர்களே,

Delete பண்ண வேண்டாம் பற்றிய ஒரு முக்கியமான அறிவிப்பை நாம் இன்று பகிர்ந்துகொள்ள விரும்புகின்றோம். 5 ஆண்டுகளுக்கு முன் ஆரம்பிக்கப்பட்ட Delete பண்ண வேண்டாம் முன்னெடுப்பானது இலங்கை, தெற்காசியா மற்றும் அதற்கு அப்பால் பெண்ணிய ஈடுபாடுகளுடன் கூடிய தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் நியாய செயற்பாடுகளுக்கு மெதுவாக ஆனால் நிச்சயமாக பங்களித்து வருகின்றது கடந்த 5 ஆண்டுகளில் நாம் கண்ட சில வெற்றிகளாவன:

  1. Delete பண்ண வேண்டாம் மும்மொழி ஆவணமாக்கல் கருவியின் துவக்கம் மற்றும் சமூகமயமாக்கல்;
  2. தொழில்நுட்பம் மற்றும்  இணையமூலமான பாலின அடிப்படையிலான வன்முறைக்கான (OGBV) பெண்ணிய அணுகுமுறைகள் மற்றும் தகவல்கள் பகிர்வதற்கான தளத்தினை அமைத்தல்;
  3. ஹேஷ்டேக் தலைமுறை இணைந்து OGBV யில் இருந்து தப்பியவர்களுக்கு ஆதரவளிக்கும் மும்மொழிமூலமான உதவி வழங்கும் அமைப்பான ப்ரத்ய வின் துவக்கம் மற்றும் செயல்படுத்தல்;
  4. பெண்ணிய நிதியங்களிலிருந்து தொடர்ச்சியான நிதி உதவி

Delete பண்ண வேண்டாம் இன் இணை – உருவாக்குநர்களாகிய – ஜெயந்தி குரு-உதும்பலா, சச்சினி பெரேரா மற்றும் ஸைனப் இப்ராஹிம் – ஆகியோர் கடந்த 5 ஆண்டுகளாக, பெருமளவில் தன்னார்வமாக இந்த முன்னெடுப்பினை உருவாக்கி, அதனை மேம்படுத்தி, நிலைநிறுத்தியுள்ளனர். Delete பண்ண வேண்டாம் இன் பரப்பு மற்றும் பணியானது விரிவானதாகவும், ஆழமாகவும், மேலும் வரையறுக்கப்பட்டதாகவும் மாறியிருப்பதால், Delete பண்ண வேண்டாம் இற்கு மேலும் கட்டமைக்கப்பட்ட குழு மற்றும் தன்னார்வ நேரத்திற்கு அப்பாற்பட்ட நேர அர்ப்பணிப்பு தேவை என்பதும் தெளிவாகியுள்ளது. எனவே, Delete பண்ண வேண்டாம் இற்கான  புதிய கட்டமைப்பு, நிர்வாகம் மற்றும் பெண்ணிய ஆற்றலுக்கு இடமளிப்பதற்காக இணை உருவாக்குநர்கள் தம் பொறுப்புகளை புதியதொரு குழுவிடம் கையளிக்கவுள்ளனர். அவர்கள் தம் பொறுப்பான நிலைகளில் தொடர்ந்தும்  உள்ளூர், பிராந்திய மற்றும் உலகளாவிய பெண்ணிய இயக்கங்களின் ஒரு பகுதியாக தம் செயற்பாடுகளை மேற்கொள்வார்கள்:

  1. ஜெயந்தி, இலங்கையில் உள்ள மகளிர் மற்றும் ஊடகக் கூட்டமைப்பு மற்றும் சர்வதேச இனக் கல்வி மையம் ஆகியவற்றின் தலைவராகிய; இலங்கை தேசிய ஒலிம்பிக் குழுவின் பாலியல் துன்புறுத்தல் முறைப்பாடுகள் குழுவின் முன்னாள் தலைவர் மற்றும் குழு உறுப்பினராவார்; இலங்கையில் குருணாகலில் உள்ள மகளிர் வள மையத்தின் சபை உறுப்பினர் மற்றும் ஐக்கிய இராச்சியத்தைத் தளமாகக் கொண்ட தொண்டர் நிறுவனமாகிய விமென் ஒஃப் த வேர்ல்ட் பவுன்டேஷனின் (Women of the World Foundation) இன் அறங்காவலராகவும் உள்ளார்;
  2. சசினி, பாலியல் மற்றும் இனப்பெருக்க நீதியை உணர்தல் (RESURJ) இன் உறுப்பினர் மற்றும் நிறைவேற்று ஒருங்கிணைப்பாளர், பெண்ணிய அமைப்புக்களுக்கான கூட்டணியின் (Alliance for Feminist Movements வழிகாட்டுதல் குழுவின் இணைத் தலைவராகவும் மற்றும் நெபுலா நிதியம் ( Nebula Fund) மற்றும் W7 இன் ஆலோசகராகவும் உள்ளார்;
  3. ஸைனப், பெண்கள், சட்டம் மற்றும் மேம்பாட்டுக்கான ஆசிய பசிபிக் மன்றத்தின் (APWLD) பெண்ணிய அறிவு, கற்றல் மற்றும் வெளியீ்ட்டு அதிகாரியாகவும், SANGAT தெற்காசிய பெண்ணிய வலையமைப்பின் முக்கிய குழு குழு உறுப்பினராகவும், இலங்கையில் வரலாற்று உரையாடல் மற்றும் நினைவக ஒருங்கிணைப்பின் (The Collective for Historical Dialogue and Memory) அறங்காவலராகவும் உள்ளார்.

அவர்கள் தொடர்ந்தும் Delete பண்ண வேண்டாம் இன் புதிய குழுவிற்கு தம் ஆதரவினை வழங்குவார்கள், எவ்வாறான விதங்களில் அவர்களின் ஆதரவு தொடரும் என்பதை வெளிச்செல்லும் மற்றும் உள்வரும் குழுக்கள் இணைந்து வரையறை செய்வார்கள்.

இரண்டு இளம் பெண்ணியவாதிகள் இணைத்-தலைமைகளின் பாத்திரங்களை ஏற்றுக்கொள்வதன் மூலம் இப்போது Delete பண்ண வேண்டாம் முன்னோக்கிச் செல்வதுடன் அவர்களை அறிமுகப்படுத்துவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்:

  1. நிகழ்ச்சிகளுக்கான இணைத் தலைவராக, மிஷாரி வீரபங்ஸா
    மிஷாரி வீரபங்ஸா ஒரு குயர் பெண்ணியவாதியும் குழுக்களிடையிலான  தொடர்பாடல்கள், சமூக நீதி மற்றும் சமத்துவமின்மை, பாலினம் மற்றும் பாலியல்பு மற்றும் இவைகள் இணையம் மற்றும் சமூக ஊடகங்களில் வெளிப்படுத்தப்படும் விதங்களில் ஆர்வமுள்ள சமூக உளவியலாளரும் ஆவார். மிஷாரி நொட்டிங்ஹாம் பல்கலைக்கழகத்தில் உளவியலில் முனைவர் பட்டம் பெற்றுள்ளதுடன் 2022 ஆம் ஆண்டில் Delete பண்ண வேண்டாம் இல் முழு-நேர ஒருங்கிணைப்பாளராகப் பணியாற்றுவதற்கு முன்பு துணை ஆசிரியர், விரிவுரையாளர் மற்றும் கல்வி நிர்வாகியாகப் பணியாற்றியுள்ளார்.
  2. செயற்பாடுகளுக்கான இணைத் தலைவராக, பிரிஸ்கிலா அருள்பிரகாசம் 
    பிரிஸ்கிலா இலங்கை  ஐக்கிய நாடுகள் சனத்தொகை நிதியம் (UNFPA)  மற்றும் இலங்கை ஐக்கிய நாடுகளின் தொண்டர்கள் நிறுவனம் (United Nations Volunteers Sri Lanka)  உட்பட இலங்கையில் பாலினம் மற்றும் பாலியல் மற்றும் இனப்பெருக்க சுகாதார உரிமைகள் தொடர்பான பிரச்சினைகளில் தன்னார்வத் தொண்டு மற்றும் பரந்த அனுபவம் கொண்ட ஒரு சமூக பணியாளராவார். அவர் இலங்கையின் தேசிய சமூக அபிவிருத்தி நிறுவனத்தில் சமூகப்பணியில் இளங்கலைப் பட்டம் பெற்றுள்ளார், மேலும் ஐஸ்லாந்து பல்கலைக்கழகத்தில் பாலினப் கற்கையில் போஸ்ட் க்ராடூயட் டிப்ளோமா நெறியை பூர்த்தி செய்துள்ளார். அவர் தன்னார்வத் திறனில் யூத் அட்வொகேசி நெட்வோர்க் இலங்கையின் (YANSL) நிறுவனரீதியான அபிவிருத்தி மற்றும் நிர்வாகத்திற்கான பணிப்பாளராகவும் பணியாற்றுகிறார்.

இவர்கள் ஒன்றிணைந்து, Delete பண்ண வேண்டாம் இன் அடுத்த அத்தியாயத்தை வழிநடத்துவார்கள், மேலும் வெளியேறும் அணிக்கு நீங்கள் காண்பித்ததை போல, இவர்களுக்கும் தொடர்ச்சியாக உங்கள் உதவி, ஒத்துழைப்பு மற்றும் ஒன்றித்த ஆதரவினை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

மிஷாரி மற்றும் பிரிஸ்கிலாவை இந்த மின்னஞ்சல் முகவரிகள் மூலமாகத் தொடர்புகொள்ளலாம்:

  1. mishaari.weerabangsa@gmail.com
  2. priskilaarulpragasam94@gmail.com
  3. deletenothingcontact@gmail.com

Delete பண்ண வேண்டாம் தொடர்பான தகவல்களுக்கு இந்த தளத்தை பார்க்கவும்!

ஒன்றிணைந்து,

ஜெயந்தி, மிஷாரி, பிரிஸ்கிலா, சசினி மற்றும் ஸைனப்

You may also like