Event

Delete பண்ண வேண்டாம் இல் தலைமை மாற்றம் தொடர்பான அறிவிப்பு

செப்டம்பர் 2, 2024
- Mishaari Weerabangsa

அன்பிற்குரிய நண்பர்களே மற்றும் Delete பண்ண வேண்டாம் ஆதரவாளர்களே,

இற்றைக்கு 5 வருடங்களுக்கு முன்னர் இணைந்து உருவாக்கப்பட்டதும் இலங்கை, தெற்காசியா மற்றும் அதற்கு அப்பால் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் நியாயத்துடன் கூடிய பெண்ணிய ஈடுபாடுகளுக்கு மெதுவாக ஆனால் நிச்சயமாக பங்களித்து வருவதுமான Delete பண்ண வேண்டாம் பற்றிய ஒரு முக்கியமான இற்றைப்படுத்தலைப் பகிர்ந்து கொள்ள நாங்கள் எழுதுகிறோம்.

பிரிஸ்கிலா அருள்பிரகாசம் வெளிநாட்டில் முதுகலைப் படிப்பைத் தொடர  Delete பண்ண வேண்டாம் இன் இணைத் தலைமைப் பொறுப்பிலிருந்து விலகுகிறார் என்பதை உங்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம். பிரிஸ்கிலாவின் அர்ப்பணிப்பு மற்றும் அவரது பதவிக்காலத்தில் அவரது விலைமதிப்பற்ற பங்களிப்புகளுக்கு நாங்கள் மிகவும் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். எங்கள் பணியை முன்னெடுத்துச் செல்வதிலும், ஆதரவான சமூகத்தை வளர்ப்பதிலும் அவர் முக்கிய பங்காற்றியுள்ளார்.

அதேசமயம், ஷெலனி பலிஹவடன Delete பண்ண வேண்டாம் உடன் இணைந்து செயல்படுகிறார் என்பதை அறிவிப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். ஷெலனி கொழும்புப் பல்கலைக்கழகத்தில் சட்டத்தில் இளங்கலைப் பட்டம் பெற்ற ஒரு சட்டத்தரணி ஆவார். தற்போது கொழும்பு பல்கலைக்கழகத்தில் மனித அபிவிருத்தி மற்றும் பாலின நீதி தொடர்பான மனித உரிமைகள் தொடர்பான முதுகலைப் பட்டம் பெற்றுள்ளார். அவர் பாலியல் மற்றும் இனப்பெருக்க சுகாதார உரிமைகள் (SRHR), பாலினம், இயலாமை உரிமைகள் மற்றும் பாதுகாப்பான கருக்கலைப்பு ஆகியவற்றில் கவனம் செலுத்தும் அர்ப்பணிப்புள்ள பெண்ணிய ஆர்வலர் ஆவார்.

ஷெலனியின் ஈர்க்கக்கூடிய பின்னணியில் இலங்கையில் உள்ள செவிப்புலனற்ற சமூகத்துடன் நெருக்கமாகப் பணிபுரியும் SRHR இல் சக கல்வியாளர் மற்றும் முதன்மை பயிற்சியாளராக இருப்பதும் அடங்கும். அவர் இலங்கையின் குடும்ப சுகாதார பணியகத்தில் (2019-2022) கட்டிளமைப் பருவத்தினர் மற்றும் இளைஞர்களின் ஆரோக்கியத்திற்கான தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவின் உறுப்பினராக இருந்தார். அவரது தொழில்முறை பயணத்தில் அரசியலமைப்பு சட்டத்தை நடைமுறைப்படுத்துவது மற்றும் நீதி அமைச்சில் ஆராய்ச்சி அதிகாரியாக பணியாற்றுவது ஆகியனஅடங்கும், அங்கு அவர் ஒரு புதிய அரசியலமைப்பை உருவாக்க அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட நிபுணர்கள் குழுவில் இணைக்கப்பட்டார். ஷெலனி SRHR, பாலினம் மற்றும் வலதுகுறைந்தோர் பிரச்சினைகள்,  OGBV ஆல் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு ஆதரவளிக்கும் ஹாட்லைன் அடிப்படையிலான சுற்றுச்சூழல் அமைப்பான ‘பிரத்ய’ போன்ற முன்னணி திட்டங்களில் முழுநேர பணிக்கு மாறினார். அவர் இலங்கையின் இளைஞர் ஆலோசனை வலையமைப்பில் (Youth Advocacy Network) நிகழ்ச்சிப் பணிப்பாளராகவும் பணியாற்றுகிறார்.

பிரிஸ்கிலாவின் பதவிக்காலத்தில் அவருடன் காட்டப்பட்ட ஒற்றுமை மற்றும் ஆதரவை நாங்கள் மிகவும் பாராட்டுகிறோம். ஷெலனி இந்த அடித்தளத்தை தொடர்ந்து உருவாக்கி, எங்களது பணியை முன்னெடுத்துச் செல்வார் என்று நாங்கள் நம்புகிறோம்.

ஏதேனும் விசாரணைகள் அல்லது ஒத்துழைப்புகளுக்கு ஷெலனியை shelani95@gmail.com மற்றும் deletenothingcontact@gmail.com மூலம் தொடர்பு கொள்ளலாம்.

ஷெலனியை இணைத்துக் கொள்வதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம், மேலும் அவர் எங்கள் நிறுவனத்திற்குக் கொண்டு வரும் விலைமதிப்பற்ற பங்களிப்புகளை எதிர்பார்க்கிறோம். அவரது நிபுணத்துவமும் ஆர்வமும் சந்தேகத்திற்கு இடமின்றி இணையவெளியை அனைவருக்கும் பாதுகாப்பான இடமாக மாற்றுவதற்கான எங்கள் முயற்சிகளை வலுப்படுத்தும்.

Delete பண்ண வேண்டாம் தொடர்பான தகவல்களுக்கு இந்த தளத்தை பார்க்கவும்!

ஒன்றிணைந்து,

மிஷாரி, பிரிஸ்கிலா மற்றும் செலனி

You may also like