அடுத்த கட்ட படிமுறைகள்

நிவாரணத்தை மற்றும் அல்லது குறையை நிவர்த்திக்க நீங்கள் எடுக்கக் கூடிய சில படிமுறைகள்

வெவ்வேறு நபர்கள் வெவ்வேறு விதமான நிவாரணத்தையும், குறை தீர்க்கும் வழிகளையும் விரும்புவர். கீழே பகிரப்பட்டுள்ள சாத்தியப்பாடுகளை நீங்கள் கருத்திலெடுத்து, உங்களுக்கு மிகப் பொருந்தக் கூடியதைத் தெரிவு செய்யலாம்.
எல்லாவற்றையும் ஸ்கிரீன் ஷொட் எடுத்து, அப்படங்களை பாதுகாப்பாக சேகரித்துக் கொள்ளுங்கள். முறையானதொரு முறைப்பாட்டினைச் செய்தல், உள்ளடக்கத்தை நீக்க முறைப்பாடு செய்தல் போன்ற சந்தர்ப்பங்களில் சான்றாதாரமாக ஸ்கிரீன் ஷொட்டுக்கள் தேவைப்படுத்தப்படும்.

உங்களது சாதனங்களை (தொலைபேசி, மடிக்கணினி, ஸ்மார்ட் சாதனங்கள் போன்றவற்றை) யும், அத்துடன் மின்னஞ்சல், சமூக வலைத்தளம் மற்றும் தகவலனுப்பும் கணக்குகள் போன்றவற்றையும் பாதுகாப்பாக வைத்திருங்கள். உங்களுக்கு வழிகாட்டக் கூடிய சில வளங்களை தமிழ், சிங்களம் மற்றும் ஆங்கிலத்தில் இங்கே காணலாம்.

உங்களுக்கு உதவக் கூடியவர் என நீங்கள் நம்பிக்கை கொண்ட நெருக்கமான நண்பர் /குடும்ப அங்கத்தவர் அல்லது ஒரு நபரிடம் கதையுங்கள்.

உறுதுணை அளிக்கக் கூடியதொரு உளவளத்துணையை/ உளவளத்துணைக்கான சேவையை நாடுங்கள். எமது பட்டியல் நீங்கள் தொடர்பு கொள்ளக் கூடிய நம்பகமான உளவளத்துணையாளர்கள் மற்றும் உளவளத்துணைக்கான சேவைகளையும் உள்ளடக்கியுள்ளது. LGBTIQ நபர்கள் தொடர்பாக உறுதுணையளிக்கக் கூடிய அனுபவம் வாய்ந்தவர்களை நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பினால் எங்களை நாடுங்கள்.


Delete பண்ண வேண்டாம் மதிப்பீட்டினை நிரப்புக. இது சம்பவம் பற்றி ஆவணப்படுத்தவும், விபரங்களை பதிவிறக்கம் செய்யவும் உதவும். இது நீங்கள் ஒரு NGO வையோ அல்லது வேறு நிறுவனங்களையோ அணுகுவதாயின் உங்களுடன் எடுத்துச் செல்லக் கூடியதாக இருக்கும்.

தொழில்நுட்பம் சார் வன்முறை தொடர்பாகப் பணியாற்றும் ஒரு NGOவினை அணுகவும். எமது பட்டியலானது குறித்த உள்ளடக்கத்தினை நீக்கும் படி நிறுவனங்களை தொடர்பு கொள்ளும், சட்ட மற்றும் உளநல உறுதுணைக்காக தொடர்புபடுத்திவிடும், பொலிஸ் நிலையத்துடன் தொடர்புகளை ஏற்படுத்தல் போன்றவற்றை உள்ளடக்கிய பல வழிகளிலும் உங்களுக்கு உதவக் கூடிய நம்பகமான NGO களைக் கொண்டுள்ளது.


பொலிஸில் உத்தியோகபூர்வமான முறைப்பாடொன்றைச் செய்யவும். இது தொடர்பில் ஏதும் சவால்கள் இருப்பின், தயவு செய்து பட்டியலில் இருந்து உங்கள் சார்பாக நடவடிக்கை எடுக்கக் கூடியதொரு NGOஇனை நாடவும்.